ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை தாக்குதல் நடந்த போது தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்கள் யார்?

Report Print Murali Murali in பாதுகாப்பு

கடந்த ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது, தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.,

தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு இதனை கோரியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றிருந்தன். இதன்போது தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி இதனை தெரிவித்தார்.

தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் அவர் கூறினார்.

Latest Offers