காலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தரித்து நின்ற வெளிநாட்டு கப்பலில் 60 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கப்பலில் இருந்து 9 பேரை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கப்பல் சோதனையிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை நடவடிக்கைகளுக்கமைய இந்த கப்பல் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.