சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞன் கைது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு
62Shares

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் எனக் கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமிடம் ஆயுதப் பயற்சி பெற்றதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு பிரிவின் உதவியுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரை மகரகமை பிரதேசத்தில் இன்று கைது செய்துள்ளனர்.

மொஹமட் தாஜூடீன் ஆசிப் அஹமட் என்ற 20 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.