இலங்கையில் தளமொன்றை அமைக்க அமெரிக்கா போடும் திட்டம்! இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Murali Murali in பாதுகாப்பு

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Economic Times in India வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை காரணமாக இந்தியாவின் தென்பகுதியில் அமெரிக்க இராணுவதளமொன்று ஏற்படுத்தப்படலாம் என குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கை எடுக்கும் முடிவை மதிக்கும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளது

இலங்கையின் இறைமையை மீறும் விதத்தில் தனது நாடு எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதையும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமருடன் அரசியல் மோதல்களில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கையின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.