ஈஸ்டர் தாக்குதலால் 10 பில்லியன் டொலருக்கும் மேல் நஷ்டம்: அமைச்சர் சுஜீவ சேனசிங்க

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டு மீண்டும் துரிதமாக வழமை நிலைமைக்கு திரும்பிய நாடாக இலங்கை மாறியுள்ளது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக பல்வேறு துறைகளில் பொருளாதார ரீதியாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள ஷில்பசேனா தொழிற்நுட்ப கண்காட்சி தொடர்பாக விளக்கும் நோக்கில் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில், கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாம் எமது இறங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தாக்குதலில் பின்னர், எமது நாட்டை நாம் மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். பல தொழிற்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்த தாக்குதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

10 பில்லியன் டொலர்களுக்கு மேலான நஷ்டம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது குறிப்பிடத்தகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் விரைவான வழமைக்கு திரும்பிய நாடாக இலங்கை மாறி வருகிறது எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers