எந்த நேரத்திலும் இராணுவம் தயாராகவே இருக்கும்! இராணுவத் தளபதி தகவல்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

பயங்கரவாதம் செயற்பட கால நேரம் இல்லை என்பதால், நாட்டின் பாதுகாப்பு படையினர் எந்த நேரத்திலும் தயாராக இருப்பார்கள் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராகமையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

எவ்வாறாயினும் தற்போதும் நாம் எதிர்நோக்குவது சர்வதேச பயங்கரவாதம் என்பதால், அந்த பயங்கரவாதம் முடிவுக்கு வரும் காலத்தை சரியாக குறிப்பிட்டு கூற முடியாது. அனைவரும் அமைதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இராணுவத்தினர் மீது நம்பிக்கை வையுங்கள். அத்துடன் மக்களும் பாதுகாப்பு தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என்பதுடன் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.