இலங்கைக்கு அன்பளிப்பாக போர்க்கப்பலை வழங்கிய சீனா!

Report Print Murali Murali in பாதுகாப்பு

இலங்கைக்கு, சீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற போர்க் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. நட்புறவு மூலம் வழங்கப்பட்ட இந்தப் போர்க் கப்பல், இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த உள்ளதாக, இலங்கை தெரிவித்துள்ளது.

கரையில் இருந்து ஊடுருவலை தடுக்கவும், கடலுக்குள் நிலவும் பருவ நிலை தொடர்பான தகவலை அறியவும், எதிரிகளை தடுக்கவும் இந்தக் கப்பல் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னதாக, 43 ரயில்களை சீனா வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.