இலங்கையின் மலையக பகுதியொன்றில் பெருமளவு கடைகள் மண்ணில் புதையுண்டு போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேன நகரில் இந்த நிலைமை ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் பெய்த அடைமழை காரணமாக கினிகத்தேனபகுதியில் பத்துக் கடைகள் புதையுண்டன.
இந்நிலையில் மேலும் 22 கடைகள் மண்ணில் புதையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறித்த பகுதியில் அண்மையில் மண் சரிவுக்குள்ளான கடைகளுக்கு, அம்பகமுவ பிரதேச சபையில் அனுமதி பெறவில்லை.
இந்நிலையில் மேலும் 22 கடைகள் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அவ்விடத்தை வெளியேறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து செல்லவில்லை என்றால் கடைகளுக்கான அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.