இராணுவ மயப்படுத்தப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலங்கள்! அறியாத பல ஆதாரங்கள்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த நில மேலாதிக்க சக்திகள் மேற்கொள்ளும் நில அபகரிப்புக்களை ஆக்கிரமிப்புக்களை எமது தமிழ் தலைமைகள் சரியான முறையில் ஆவணப்படுத்தவில்லை என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் நவனீதன் தெரிவித்துள்ளார்.

நலிவுற்றுப்போன நல்லாட்சியும், தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் நன்கு திட்டமிட்ட முறையிலேயே மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் காரணமாக தமிழர்களுடைய இருப்பு கிழக்கிலே நலினப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த முயற்சி இப்போது வேகமாக வடக்கிலே இடம்பெற்று கொண்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்ட அவர், இதன்போது மேலும் பேசியதாவது,