நாளை தொடங்குகிறது உயர் தரப்பரீட்சை! பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார்

Report Print Aasim in பாதுகாப்பு

நாளைய தினம் தொடக்கம் ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை அறிவித்துள்ளார்.

பிரதேச மட்டத்திலான 32 சேகரிப்பு நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிலையங்கள் என்பவற்றிற்கு ஆயுதம் தாங்கிய மூன்று பொலிஸார் வீதம் பரீட்சைகள் நிறைவடையும் வரை 24 மணிநேரமும் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக இலங்கை முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு நடமாடும் பொலிஸ் சேவை, மோட்டார்சைக்கிள் ரோந்து அணி, கால்நடை ரோந்து அணி என பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக பரீட்சை விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஆயுதம் தாங்கிய இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்ப பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வாறான நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.