பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய இளைஞன்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

ஹிக்கடுவ, தொடம்துவ பகுதியில் ஒரு தொகை ஹெரோயின், விளையாட்டு துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றை பரிசோதனை செய்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 400 மில்லிகிராம் ஹெரோயினும் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடம்துவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers