கொழும்பில் அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு நகரங்களுக்கு நுழையும் வாகனங்களுக்கு வரி பணம் ஒன்றை அறவிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு நகர சபை பிரதேசத்தில் உள்ள கழிவுகளை வேறு பிரதேசங்களில் ஏற்றுக்கொள்ளாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறவிடப்படும் வரிப்பணத்தின் மூலம் கொழும்பு நகர சபை எல்லைக்குள் வாழும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கழிவுகளை அகற்றும் நிறுவனம் ஒன்றினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரம் பெற அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.