திருகோணமலையில் இன்று அதிகாலை கைக்குண்டு மீட்பு

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

துருப்பிடித்த நிலையில் குறித்த கைக்குண்டு காணப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய வீதியோரத்திலுள்ள காண் ஒன்றிலிருந்து இந்த கைக்குண்டை மீட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டு பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்திற்கு செல்லப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸார் மூலம் அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers