பயங்கரவாதி சஹ்ரானுக்கு இத்தனை கோடி ரூபா சொத்தா? அதிரடி நடவடிக்கையில் அரசாங்கம்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹ்ரான் உட்பட சகாக்களின் 130 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பல வங்கி கணக்குகளையும் கண்டுபிடித்துள்ளதாகவும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் அந்த பணத்தை அரச சொத்தாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குற்ற விசாரணை திணைக்கள சிரேஷ்ட அதிகாரி ஷனி அபேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மேலும் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சொத்துக்களில் வாகனங்கள், தங்க நகைகள், வீடுகள் மற்றும் சொத்துக்கள் உள்ளடங்குவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.