தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தொடர்பிலான மோசடிகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் போது, பிறக்கும் போது அடையாள அட்டை இலக்கம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரஜைகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைக் குறிப்பிட்டார்.