விசேட பயிற்சி பெற்ற காலாட் படைப் பிரிவினரின் பயிற்சி நிறைவு

Report Print Aasim in பாதுகாப்பு

காலாட் படைப் பிரிவின் விசேட பயிற்சிகளைப் பெற்ற படையணியின் பயிற்சி நிறைவு வைபவம் இன்று நடைபெற்றுள்ளது.

பதுளையில் அமைந்துள்ள மாதுரு ஓயா இராணுவ பயிற்சி முகாமில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுமார் 285 இராணுவத்தினர் தங்களது விசேட பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இதுவரை காலமும் விசேட படைப் பிரிவினர் மற்றும் கமாண்டோக்கள் பெற்றிருந்த பயிற்சிகளை காலாட் படையினருக்கும் வழங்கும் வகையில் இந்த பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

பயிற்சி நிறைவு வைபத்தில் மூத்த இராணுவ அதிகாரிகளும், பொதுமக்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டிருந்தனர்.