மடாட்டுகம பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு

Report Print Aasim in பாதுகாப்பு

மடாட்டுகம பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளது.

மடாட்டுகம பள்ளிவாசலின் பின்புறத்தில் உள்ள காட்டுப் பகுதியின் கற்பாறையொன்றில் பொதியிடப்பட்டு இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாரேனும் ஒரு நபர் அல்லது குழுவினர் ஏதேனும் குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வெடிபொருட்களை மறைத்து வைத்திருக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பார்சல் சில மாதங்களுக்கு முன்னர் அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ;தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers