விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்

Report Print Aasim in பாதுகாப்பு

ஒரு கோடி 87 லட்சம் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் வருகை தந்திருந்த குறித்த பெண்மணியை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவரிடமிருந்த கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு பயணப் பைகளின் மறைவான இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டு குறித்த போதைப் பொருள் எடுத்து வரப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் ஒரு கிலோகிராம் 250 எடையைக் கொண்டுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபா பெறுமதியானது என்றும் தெரிய வந்துள்ளது.

Latest Offers