கடும் அதிருப்தியடைந்த சரத் பொன்சேகா! எடுத்த அதிரடி முடிவு?

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது பீல் மார்சல் பதவியை திருப்பி ஒப்படைப்பதற்கு முடிவு செய்துள்ளார் என அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோருக்கு முறையே அட்மிரால் ஒப் த பிலீட் எனவும், மார்சல் ஒப் த எயார் போஸ் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டமையை அடுத்தே சரத் பொன்சேகா இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த அதிகாரிகளக்கு வழங்கப்பட்ட உயர் பதவிகள் இரண்டும், முன்னாள் இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட பதவிக்கு சமமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது சரத் பொன்சேகாவிற்கு அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளதால் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சரத் பொன்சேகா தரப்பினர் உத்தியோகிபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers