கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யபட்ட பெண்ணிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வந்த குறித்த பெண்ணை சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதான இந்திய பெண் என தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பையை சோதனையிட்ட போது, அதில் பொலீத்தின் பைகளில் வைக்கப்பட்ட நிலையில் கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ 250 கிராம் நிறையுடைய கொக்கைன் மீட்கப்பட்டது. அதன் முழுமையான பெறுமதி ஒரு கோடி 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers