கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வரும் புதிய தடை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வான்பரப்பில் தினசரி விமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்ளக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வானத்தில் 5 கிலோமீற்றர் தூரத்தில் பட்டம் பறக்கவிடுவது சட்டவிரோதமான செயல் அல்லது தண்டனை வழங்கப்படும் குற்ற செயல் என விமான நிலைய முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாநயக்க சர்வதேச விமான நிலையம், மத்தல விமான நிலையம், இரத்மலானை, பலாலி, சீகிரிய, கொக்கல ஆகிய விமான நிலையங்களுக்கு அருகில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் பட்டம் பறக்கவிட்டால், அதன் நூள் விமானங்களின் இறக்கைகள் மற்றும் ஏனைய பகுதிகளில் சிக்கிக்கொள்வதாகவும், இதன் மூலம் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும். விபத்துக்கள் ஏற்பட கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.