அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இராணுவத்தினரும் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.