ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய போட்ட அதிரடி உத்தரவு!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கோத்தபாய தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார். இதன்போது ஊடகங்கள் கேள்வி எழுப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கோத்தபாயவிடம் கேள்வி கேட்க ஊடகவியலாளர்கள் முயற்சித்த போதும், அவரின் ஊடகப் பிரிவு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

கோத்தபாய அனுமதி வழங்கினால் மாத்திரம் அதனை பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers