கொழும்பில் இருந்து சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியமையால் பரபரப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பில் இருந்து அருவக்காலு வரை கொண்டு செல்லப்பட்ட கழிவு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியமையினால் சற்று பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் - மன்னார் வீதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

3 டிப்பர் வாகனங்களின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டமையினால் வாகனங்களின் பின் கதவுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அருவக்காலு வரை கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இதற்கு முன்னரும் பல முறை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.