கோத்தபாயவின் உயிருக்கு ஆபத்து! பின்னணியில் வடக்கின் முக்கிய குழு?

Report Print Murali Murali in பாதுகாப்பு

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கை சேர்ந்த குழு ஒன்றினால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இந்நிலையிலேயே, தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள முக்கிய குழு ஒன்றினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து தனக்கு தகவல்கள் வழங்கியதாகவும் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்சவை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ய முயற்சிப்பதாக திவயின பத்திரிகையின் பாதுகாப்பு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.