மஹிந்த, கோத்தபாயவுக்கு புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கடுமையான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினால் அவரது பாதுகாப்பு பிரிவிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி மக்கள் மத்தியில் செல்வதனை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படாத பிரதேசங்களுக்கு செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோத்தபாய மற்றும் மஹிந்தவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வீதிகளில் வாகனங்களில் பயணிக்கும் போது, இருவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மலர் மாலை மற்றும் வேறு பொருட்களை பெற்றுக்கொள்ளும் போது அதனை கடுமையாக சோதனையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.