பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்ற சவேந்திர சில்வா

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

புதிய இராணுவ தளபதி சவேந்திர சில்வா தனது கடமைகளை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா கடந்த 19ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமன கடிதத்தை சவேந்திர சில்வாவிடம் கையளித்திரு்நதார்.

இதனையடுத்து குறித்த நியமனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன.

இந்த நியமனம் தொடர்பில் வெளிநாடுகளும் தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.