கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கண்காணிப்பு கமரா பொருத்திய வாகனம்

Report Print Sumi in பாதுகாப்பு

யாழ். நல்லூர் ஆலய வளாகத்தை கண்காணிக்க கொழும்பிலிருந்து கண்காணிப்பு கமரா பொருத்திய விசேட வாகனம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் திகதி நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் வெகு விமர்சையாக ஆரம்பமாகிய நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிர்வரும் நாட்களில் நல்லூர் கந்தன் ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் இடம்பெற உள்ளன.

இந்த விழாக்களில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விசேட நடமாடும் கண்காணிப்பு கமரா பொருத்திய வாகனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கண்காணிப்பு செயற்திட்டமானது இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஆலய வளாகத்தில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட இந்த வாகனம் தரித்து நின்று கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.