கிளிநொச்சியில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டது ஏன்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கிளிநொச்சில் இன்று காலையில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டமைக்கான காரணத்தினை இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.

வட்டக்கச்சி கிருஷ்ணர் ஆலயத்திற்கு அருகிலுள்ள காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸ், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது அந்தப் பகுதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டு வளவும் சோதனையிடப்பட்டது.

எனினும் தவறுதலாக அந்தப் பகுதியில் சோதனையிடப்பட்டதாக தெரிவித்த இராணுவத்தினர் அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.