நாடாளுமன்ற தெரிவு குழுவின் காலம் நீடிப்பு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றின் நிலையான ஆணை 102 இன் அடிப்படையிலேயே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மே 22ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்டையிலே இந்த தெரிவு குழு நியமிக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் புஜித ஜெயசுந்தர, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹமசிரி பெர்னாண்டோ, சிரேஸ்ட புலனாய்வுதுறை சேவை அதிகாரி நிலந்த ஜெயவர்தன, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த குழு முன்னணியில் சாட்சியம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.