கோத்தபாய விவகாரம்! விசாரணை மீண்டும் சீ.ஐ.டி. வசம் ஒப்படைப்பு

Report Print Aasim in பாதுகாப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் மீண்டும் சீ.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாட்டுப் பிரஜையாக இருந்த நிலையில் இலங்கை கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் விசாரணைகள் கைமாற்றப்பட்டன.

கொழும்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் விசாரணைகள் மீண்டும் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் நேரடியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers