இலங்கையில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
553Shares

இலங்கையில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் அவசர கால சட்டம் புதுப்பித்து வந்த நிலையில், நான்கு மாதங்களின் பின்னர் நேற்றுடன் அது நிறைவுக்கு வந்துள்ளது.

எனினும் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவசரகால சட்டம் உத்தியோகபூர்வமாக இரத்து செய்யப்பட்ட வர்த்தமானி இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவசரகால சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.