அவசரகால சட்ட நீக்கம் தொடர்பில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

அவசரகாலச் சட்ட நீக்கத்தினால் பயங்கரவாதிகளுக்கு சுதந்திரம் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசரகாலச் சட்ட நீக்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு எவ்வித தடையும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளது.