வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் உடனடியாக விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

போலி இத்தாலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கையில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக வந்த வெளிநாட்டு இளைஞனே நாடு கடத்தப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த இளைஞன் எந்த நாட்டுப் பிரஜை என அடையாளம் காண முடியவில்லை என விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி இஸ்தான்புல் நகரத்தில் இருந்து TK-730 என்ற விமானத்தில் குறித்த இளைஞன் இலங்கை வந்துள்ளார்.

ஆங்கில மொழியில் புலமையற்ற குறித்த இளைஞன் அதிகாரிடம் பதிலளிக்க சிரமப்பட்டுள்ளார். இத்தாலிய மொழியிலும் அதிகாரிகள் கேள்விகள் கேட்ட போதும் அதற்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை.

இத்தாலி நாடு தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்க முடியாமல் போயுள்ளதுடன், இலங்கையில் இருந்து திரும்பி செல்வதற்கான விமான டிக்கட்டும் அவரிடம் இருக்கவில்லை.

எந்த நாட்டு பிரஜை என தன்னை அடையாளப்படுத்தும் எந்தவொரு நபரையும் இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என சட்டம் உள்ளது.

இதற்கமைய குறித்த இளைஞனை நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.