நாட்டில் தொடரும் கைதுகள்- இன்றும் ஒருவர் கைது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இன்று மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள முருத்தவேலா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதான ரஷீத் அக்பர் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கு உதவியதாகவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.