சிகிரியாவில் உள்ள இனமலுவ இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் நேற்று மாலை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
23 வயதான குறித்த சிப்பாய் முகாமில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே மின்சாரம் தாக்கியுள்ளது.
குறித்த சிப்பாய் , ஊவா பரணகமவைச் சேர்ந்த் அசங்க உதய குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.