ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

Report Print Murali Murali in பாதுகாப்பு
951Shares

ஹங்வெல்ல – ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் சற்று முன்னர் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஹங்வெல்ல – ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்த இரண்டு நபர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரியொருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

ரி-56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 43 வயதான வர்த்தகர் மற்றும் 22 வயதான அவரது சாரதி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.