பயங்கரவாதிகளின் 600 கோடி ரூபா சொத்துக்களை கண்டுபிடித்த பொலிஸார்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களின் 600 கோடி ரூபா சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணி, கட்டடங்கள், மற்றும் வாகனங்கள் உட்பட இந்த சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீவிரவாதிகளுக்கு சொந்தமான 20 மில்லியன் ரூபா பணத்தை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு உதவிய 41 பேர்களின் 100 வங்கி கண்குகளில் இருந்த 134 மில்லியன் ரூபா முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.