இராணுவ அதிகாரி வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் தற்கொலை

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

இராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிலியந்தலை பொலிஸ் பிரிவின் இலக்கம் 167, ருவிருபுர, பட்டுவந்தர என்ற முகவரியில் உள்ள வீட்டில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

இராணுவ சிப்பாய், வீட்டின் கூரையில் நைலோன் கயிற்றை கட்டி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அநுராதபுரத்தை சேர்ந்த 24 வயதான சஞ்ஜிக பிரபாத் ராஜபக்ச என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.