நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சி நடவடிக்கையா? சிங்கள ஊடகம் தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நள்ளிரவில் சூழ்ச்சிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கைப்பற்றியதன் மூலம் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கான சூழ்ச்சிகள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூபவாஹினியின் தலைவராக இனோகா சத்தியலிங்கம் செயற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் வேறு தலைவரை நியமிக்க பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.