மைத்திரியின் திடீர் முடிவால் திணறும் தொலைக்காட்சி நிறுவனங்கள்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி செயற்பாடாக நேற்றையதினம் தேசிய தொலைக்காட்சி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானமாது, அரசாங்கத்திற்குள் பாரிய மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ரணில் - மைத்திரி உள்ளக மோதல்களை வெளிப்படுத்துவதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டமூலத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் முறையீடு செய்துள்ளனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முறுகல் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிப்காட்டியுள்ளனர்.

தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.