பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு....! கண்காணிக்கப்படும் உங்கள் செயற்பாடுகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துளளது.

இந்தக் கோரிக்கையை இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திடம், ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு எதிரான பல்வேறு கருத்து மோதல்கள் சமூக வலைத்தளங்களில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பெருமளவு போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் உருவாக்கியுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் தேர்தல் காலத்தில் போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் டுவிட்டர் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் வெளியிடப்படும் வன்முறை கருத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக சமூக வலைத்தளங்கள் தீவிரகமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்.