யாழில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - மூவர் மீது வாள்வெட்டு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 3 போ் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றியமையினால் வன்முறையாக மாறியது.

இரு குழுக்களும் இன்று காலை கத்திகள், வாள்களுடன் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3 இளைஞா்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனா்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் கடைகளை வைத்திருப்போருக்கு இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.