தென்னிலங்கையில் வெடிப்பு சம்பவம் - தப்பியோடிய ஊழியர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தங்காலை டிப்போவில் பேருந்துகளுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தங்காலை டிப்போவில் நேற்று மாலை பேருந்து ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது டிப்போ ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த இரண்டு பேருந்துகள் தீபற்றியுள்ளன. தங்காலை தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.