அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை வரும் முக்கிய பாதாள உலக குழுத் தலைவர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் மறைந்துள்ள அங்கொட லொக்காவை நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை வந்து வேறு ஒரு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளார் என புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமயங் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கொட லொக்கா மற்றும் லடியா இந்தியாவிற்கு சென்றனர். மதுஷின் உத்தரவிற்கமைய அங்கொட லொக்கா இந்தியாவில் பாதுகாக்கப்பட்டார்.

இந்தியாவில் இருந்து டுபாய் செல்வதற்கு அங்கொட லொக்கா முயற்சித்த போதிலும், மாகந்துரே மதுஷ் அதற்கு ஆதரவு வழங்காமையினால் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது.

மதுஷின் இரண்டாவது மனைவி டுபாயில் இருந்து மதுஷை காப்பாற்றும் முயற்சியில் இந்தியாவிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள தலைவர் மதுஷின் இரண்டாவது மனைவியை தன்னுடன் வைத்து கொண்டுள்ளார்.

இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையில் பாரிய மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.