அவிசாவளையில் இரு சமூகங்களுக்கு இடையில் மோதல்! அதிரடி படையினர் குவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அவிசாவளையில் இரு சமூகங்களை சேர்ந்த குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தல்துவ – நாபல பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் காரணமாக அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

தாக்குதலில் பேருந்து சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.