கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்! தடுத்து நிறுத்திய அதிரடி படையினர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பில் நள்ளிரவு வேளையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அதிரடி படையினர் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருதானை சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பதாதைகள் கிழிக்கப்பட்டமையினால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருதரப்பினரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளே இவ்வாறு கிழிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அங்கு ஒன்றுதிரண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கிழித்ததாக குற்றம் சாட்டினர். இதன்போது அங்கிருந்த பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையை அடுத்து, கிழிக்கப்பட்ட பதாதைகளை அதிரடி படையினரின் பாதுகாப்புடன் மீண்டும் காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.