கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளை முடக்கப் போவதாக எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

விமான நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுக அதிகாரிகள் அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கனுகல தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் சேவை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலையிடவில்லை என்றால் அனைத்து அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நீண்ட காலமாக குடிவரவு குடியகல்வு சேவையில் ஏற்பட்டுள்ள அநீதி மற்றும் தங்கள் சேவையில் ஏற்பட்டு சிக்கல்களை தீர்ப்பதற்கு பல முறை அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

எனினும் அதற்காக எந்தவொரு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக தாம் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கனுகல தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டினால் விமான நிலைய மற்றம் துறைமுக நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பல்துறை துறைகளை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.