கொழும்பின் புறநகர் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகளின் பின்னணி என்ன?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டில் மீண்டும் இன ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டுகளின் பின்னணியிலும் இவ்வாறான சதி நடவடிக்கையே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராவத்தை பிரதேசத்தில் பாழடைந்த பகுதியிலிருந்து 3 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனை இனரீதியான செயலாக தூண்டிவிட சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் தொடர்ச்சியாக மொரட்டுவ பிரதேசத்தில் பாரிய வெடிப்பு சம்வபம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக வலுவான வெடி குண்டுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்கள் பரபரப்பப்பட்டுள்ளன.

நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ளதாக இரவு 10 மணியளவில் வேகமாக பதிவுகள் பரவியுள்ளது. எனினும் அது காணி துப்பரவு செய்யும் இடத்தில் இருந்து 3 கைக்குண்டுகள் மீட்டுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் கடற்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டது. அவற்றில் இரண்டு மிகவும் பழமையான குண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...