கத்தோலிக்க நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - கர்தினால் ஆண்டகை கோரிக்கை

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

நாட்டில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று கொழும்பு பேராயரும் கர்தினாலுமான மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கத்தோலிக்க நிறுவனங்கள் மீது அச்சசுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அந்த நிறுவனங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமல் உள்ளன. எனவே அவற்றுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கர்தினால் குறிப்பிட்டார்.

தேர்தல் காலமாகையால் சில தரப்பினர் தமது அரசியல் நோக்கங்களுக்காக சில சம்பவங்களை ஏற்படுத்தலாம். தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். எனவேதான் தாம் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருவதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கையை கடிதம் ஒன்றை கர்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். எனினும் தாக்குதல்கள் தொடர்பாக புலனாய்வுப்பிரிவினர் எவ்வித தகவல்களையும் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...